சசிகலாவின் கைப் பாவையை முதல்வராக நியமிக்க, எப்போது, அதிமுக., முடிவுசெய்ததோ, அப்போதே அக்கட்சியின் கதை முடிந்துவிட்டது' என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தன், 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கைப்பாவையை, சட்டசபை கட்சிதலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம், அ.தி.மு.க., தன் மரணத்துக்கு குழி தோண்டிவிட்டது. தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால், சந்தேகமே இல்லாமல், திமுக., தான் பெரும்வெற்றி பெறும். அ.தி.மு.க., மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தேபோகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply