'அ.தி.மு.க.,வின் சின்னம் இரட்டையிலை என்பதற்கு பதில், 'டாஸ்மாக்' என்று வைக்கலாம்,'' என, பா.ஜ., தேசியசெயலர் முரளிதர ராவ் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், பாஜக., வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ.க, தேசிய செயலர் முரளிதர ராவ் பேசியதாவது:

இந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு ஜெயலலிதா என்ன செய்திரு க்கிறார். ஒவ்வொரு ஆண்டும், 'டாஸ்மாக்' மதுவிற்பனையை இரட்டிப்பாக்கியதுதான் சாதனை. எனவே, அதிமுக., சின்னம் இரட்டைஇலை என்பது இனி சரியாகஇருக்காது; 'டாஸ்மாக்' என வைக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுக்கு குடி நீர் கிடைக்க வில்லை; குழந்தைகளுக்கு பால்கிடையாது. ஆனால், 24 மணி நேரமும் சாராயம் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. ஒருதாய் தன் மகனிடம் என்ன சொல்லித் தருவாள். பள்ளி, கல்லுாரிக்கு போ; டாக்டருக்கு படி; இன்ஜினியருக்கு படி என்பார்.

ஆனால், இந்தம்மா காலை, மதியம், இரவு என மூன்றுவேளையும் சாராயம் குடி என்கிறார். இங்கு, அப்பா கட்சி ஒன்று உள்ளது. அது ஒரு குடும்பகட்சி. 93 வயதிலும், பதவி ஆசையில் அப்பா வலம்வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply