இவன் தான் புல்வாமா தாக்குதலை ஒருங்கினைத்தவன் !!

லெப்டினன்ட். ஜெனரல். ஆசிம் மூனீர் பாகிஸ்தான் ISI உளவு அமைப்பின் தலைவன்.

பாகிஸ்தான் ராணுவத்தின் வடக்கு கட்டளையக (Northern Command) தளபதியாக இருந்தவன் , பின்னர் தற்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா ISI அமைப்பிற்கு தலைமை தாங்க இவனை தேர்ந்தெடுத்துள்ளான்.

பாகிஸ்தான் ராணுவத்தின் வடக்கு கட்டளையகம் என்பது காஷ்மீர் , பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளுக்கு பொறுப்பானது. அந்த கட்டளையகத்தின் தலைமை தளபதியாக இருந்த காரணத்தால் காஷ்மீர் களநிலவரம் , எல்லை பகுதிகள் இவனுக்கு அத்துபடி அதனாலயே ISI அமைப்பிற்கு தலைமை தாங்க தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

கடந்த அக்டோபர் மாதத்தில் ISI டைரக்டர் ஜெனரலாக பதிவியேற்ற இவன் 5 மாதங்களுக்கு குறைவான காலத்தில் ISI முலம் பல பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கினைத்துள்ளான்.

அதில் இரண்டு மிகப்பெரிய தாக்குதல்கள் அடங்கும் அவை,

1, February 13ஆம் தேதி அதிக பிரச்சினை நிறைந்த ஈரான் பாகிஸ்தான் எல்லைபுற மாகாணமான சிஸ்டா பலுச்சிஸ்டானில் இதே போன்று ஈரான் எல்லை காவல் படை பேருந்தில் தற்கொலை படை தாக்குதல்
இதில் 27 ஈரான் வீரர்கள் பலி , சில பொதுமக்கள் மரணம் மற்றும் பலர் படுகாயம். ஈரானும் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

2, February 14ஆம் தேதி அதிக பிரச்சினை நிறைந்த இந்திய பாகிஸ்தான் எல்லைபுற மாநிலமான காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தற்கொலை படை தாக்குதல் , 40+ வீரர்கள் வீரமரணம்.
பலர் படுகாயம்.

இந்த இரு தாக்குதல்களுக்கும் துளியும் வித்தியாசம் இல்லை , ஒரே விதமான தாக்குதல்கள் .

இந்த தாக்குதல்களில் கவனிக்கபட வேண்டிய விஷயங்கள் ,

1) ஈரானும் இந்தியாவும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு ஆகாத நாடுகள்.

2) ஈரானுக்கும் இந்தியாவிற்குமான வளர்ந்து வரும் நட்பு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் முற்றிலும் பிடிக்காத ஒன்று.

3) பாகிஸ்தானில் சீனா CPEC எனும் வணிக பாதை திட்டத்தை க்வதர் (Gwadar) துறைமுகம் தொடங்கி பலுச்சிஸ்டான் , பஞ்சாப் , பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அக்சாய் சீன் , திபேத் வழியாக சீனாவிற்கு உருவாக்கி வருகிறது.
ஆனால் அதற்கு அருகிலேயே ஈரானில், சாபாஹார் (CHABAHAR ) எனும் துறைமுகம் ஒன்றை இந்தியா நிர்மாணித்து வருகிறது.
இது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு அறவே பிடிக்கவில்லை.

4) பயங்கரவாத தாக்குதல் என்பது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தங்களுக்கு பதில் வேறு சிலரை வைத்து நடத்துவது , சர்வதேச சமுகத்தின் முன்பு தங்களை கறைபடியாத கரங்கள் கொண்டவராக காண்பிப்பது எளிது. நம் ஊர் வழக்கில் சொன்னால் கூலிப்படை ஏவுதல் போன்றது.

அதனால் இந்த தாக்குதல்களை மறைமுகமாக சீனாவும் ஆதரித்து வருகிறது.எதிர்காலத்தில் நிழல் யுத்தம் (Proxy war) மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை அதிகமாக இந்த நாடுகள் ஊக்குவிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-மொஹம்மது பயங்கரவாத குழுவின் தலைவன் மசூத் ஆசாரை பிடிக்க ஐ.நா. சபையில் இந்தியா எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் சீனா வீட்டோ அதிகாரம் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply