நாடுமுழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது: கடந்தாண்டு வரையில் மாநில அரசு தேர்வுக் குழு பரிந்துரைக்கும் பட்டியல்படி அரசு பள்ளியின் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசியவிருது வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தநிலை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநித்தில் இருந்தும் ஆறு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர். இவர்களை தனிதேர்வு குழு தேர்வு செய்து அதில் இருந்து 50 ஆசிரியர்களை தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் தங்களின் பணித்திறன் குறித்த வீடியோ பதிவையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் .இவ்வாறு ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply