19.2.2014 ல் அன்றைய UPA அரசின் இடைக்கால பட்ஜெட்டை கேள்வி கேட்ட அன்றைய பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, அவர் ஒரு மாநில முதல்வர் என்று கூட பாராமல் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பதில் என்ன தெரியுமா?
 
"அவரின் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. பொருளாதார நிபுணர்கள், பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு பதில் அளிக்கத் தயார்.
 
        ••பொருளாதாரத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் போல் உள்ள மோடிக்கு நான் பதிலளிக்க முடியாது"••  என்பதுதான்.
 
இப்படி பதில் சொன்ன பொருளாதார மேதை,2004 ல் NDA வின் வாஜ்பாய் ஆட்சியை, UPA விடம் ஒப்படைத்தபோது இருந்த 8.5 சதவீத  பொருளாதார வளர்ச்சியை,
 
2014 ல் மோடியிடம் ஒப்படைத்தபோது 4.7 சதவீதமென சீரழித்து வைத்திருந்தார்.இப்படி 8.5 லிருந்து 4.7 என சீரழித்த மேதையிடமிருந்து, ஆட்சியை பெற்ற மோடியோ, சரியாக மூன்றே ஆண்டுகளில் வளர்ச்சியை 7.5 சதவீதத்திற்கு உயர்த்தினார்.
 
இன்று உலக வங்கி தலைவர் முதல், உலக நிதியத்தின்(IMF) தலைவர் வரை மோடியின் பொருளாதார ஞானத்தை பாராட்டுவதுடன் தற்போது இந்திய பொருளாதாரத்தை,
 
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியை முந்தி உலகளவில் நான்காவது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகும் திறனை உருவாக்கி இருக்கிறார்.
 
பொருளாதார மேதையென போலியாக தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட ப.சிதம்பரம் இன்று மூக்கறுபட்டு, முகம் கவிழ்ந்து நாணிக் கோணி நடைபிணமாய் திரிகிறார், திரிய வேண்டும்.
 
இனி ப.சி க்கு மோடி பெயரை உச்சரிக்கக் கூட அருகதை கிடையாது.

Leave a Reply