ஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கிராமங்களை இணைக்கும் பிரதமரின் தடை யில்லா போக்குவரத்து திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஏழைகளுக்கு உதவும்திட்டம் உள்ளிட்ட கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.


 இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கும்பணியை மேலும் துரிதப்படுத்த புதுமையான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப் படுவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.


 சாலைகளை அமைக்கும் போது அதன் தரம் குறித்து 3 நிலைகளில் கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.


 அவை சாலை அமைப்பதற்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்யும் போதும், சாலையை அமைக்கும்போதும், அவற்றை பராமரிக்கும் போதும் தரம் குறித்து சோதனை நடத்தவேண்டும்.  மகளிர் சுய உதவிக் குழுக்களில் 3 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆதார்அட்டை மூலம் வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும். சுய உதவி குழுக்களுக்கான கடன்வழங்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், அந்த கடன்தொகை உண்மையான பயனாளிகளிடம் சென்றுள்ளதா? என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply