நாடுமுழுவதும் ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்திஇருந்தது. அதன்படி ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டதால் 2.75 கோடிக்கும் அதிகமான போலிரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போலிரேஷன் கார்டுகளை பயன்படுத்தி மானிய விலையில் அதிக அளவிலான உணவுதானியங்கள் பெறப்பட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. உ.பி., மற்றும் மேற்கு வங்கத்தில் 50 சதவீதம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply