ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த் தியான சுவர் இருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் ஒன்றாக விசாரித்து வருகிறது. முக்கியமாக ஆதார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வாட்ஸ் ஆப் குழுஒன்றில் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்பட்டதில் இருந்து இந்த பிரச்சனை பெரியளவில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ஆதார் தகவல்களை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் பட்டு இருக்கிறது என்று உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.
 
இதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால் ''ஆதார் தகவல்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்படுகிறது. பொது மக்களின் ஆதார் தகவல்களை அவர்கள் அனுமதி இல்லாமல் யாரும் பயன் படுத்த முடியாது'' என்றுள்ளார்.
 
மேலும் ''ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த்தியான சுவர் இருக்கிறது. அந்தசுவர் இருக்கும் கட்டிடத்திற்குள்தான் ஆதார் தகவல்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆதார்தகவலை யாரும் திருட முடியாது'' என்றுள்ளார்.

Leave a Reply