இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து ஹீரட்மாநிலத்தில், ஆப்கன் – இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்திருக்கிறார்.

நீர்மின் அணைத்திட்டத்தின் நிறைவை குறிக்க திரு. நரேந்திர மோடி நேற்று, ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அந்தத்திட்டம் கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் செலவில் தயாரானது.

முதன்முதலில் 1976-ல் மேற்கு ஹீரட் மாநிலத்தில் அணை கட்டப்பட்டது. தொண்ணூறுகளில் நிகழ்ந்த உள்நாட்டு போரில் அது சேதம டைந்தது. சுமார் 1,500 இந்திய, ஆப்கானிய பொறியாளர்களால் அணை மீண்டும் கட்டப் பட்டதாக இந்தியவெளியறவு அமைச்சு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானின் எதிர் காலத்திற்கு நம்பிக்கையை அளிப்பதோடு மின் சாரத்தையும் அதுவழங்கும் என்று திரு. மோடி கூறினார். அணை 100 மீட்டர் உயரமும், 540 மீட்டர் அகலமும்கொண்டது.

அது 42 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்வதோடு 75,000 ஹெக்டேர் விவசாயநிலத்திற்கு நீர்பாய்ச்ச உதவும் என்று இந்தியப்பிரதமர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் சீரமைப்பு திட்டங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் இந்தியா 1 பில்லியன் டாலருக்குமேல் வழங்கியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள், எல்லை பதற்றங்கள் ஆகியவை காரணமாக பாகிஸ்தானுடன் உறவு மோச மடைந்துள்ள நிலையில், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்திவருகிறார்.

Leave a Reply