ஆப்கனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பார்லி., வளாகத்தை திறந்துவைத்தார். இந்திய முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பெயரில், 'அடல் பிளாக்' என பெயரிடப்பட்ட இந்த கட்டிடத்தை அவரது பிறந்தநாளில் திறந்துவைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மோடி கூறினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வாஜ்பாய் பிறந்த நாளில் அவரது பெயரிலான பார்லி., கட்டடத்தை திறந்துவைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா – ஆப்கன் நட்புறவின் அடையாளமாக இந்த  கட்டிடம் அமையும். இந்தியர்கள் – ஆப்கானிஸ் தானியர் அன்பும் நெருக்கமும் கொண்டுவிளங்குகின்றனர்.

ஆப்கனில் வளர்ச்சியும், அமைதியும் நிலவமுன்னெடுத்து செல்லும் பயணத்தில், இந்தியா எப்போதும் துணைநிற்கும். ஆப்கன் பாதிக்கப்பட்டால் இது எங்களுக்கு வலியைதரும் உங்களின் கனவு எங்களின் கடமை, உங்களின் பலமே எங்களின் நம்பிக்கை, உங்களின் நெஞ்சுரமே எங்களின் உணர்வு, கவிதை, அழகு, மரியாதை , மேதைகள்போன்ற மாமனிதர்கள் பிறந்த பூமி இது. ஆப்கானிஸ்தானில் எதிர் காலத்தை சீரமைக்கவும், போராட்டங்களில் இருந்து விடுபடவும் மக்கள் ஓட்டளிக்கவேண்டும்.

துப்பாக்கி மற்றும் வன்முறை ஆப்கனின் எதிர் காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கக்கூடாது . நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அமைதியாக வாழ வன்முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் .

பார்லி., கட்டடம்தான் நமது உறவின் அடையாளம், பல்வேறு சவால்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் உயர்ந்துவருகிறது . சுதந்திர போராட்டத்தில் ஆப்கானிஸ்தானின் பங்கை நாம் எப்போதும் நினைவுகூர்வோம் , தெற்காசியாவையும், ஆப்கனையும் இணைக்கும் பாலமாக பாகிஸ்தான் விளங்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது, இவ்வாறு மோடி பேசினார் .

Leave a Reply