ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தபட்ட தாக்குதல்  முன்கூட்டியே திட்டமிட்டதோ அல்லது இன வாத தாக்குதலோ கிடையாது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
தலை நகர் டெல்லியில் காங்கோ நாட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துபேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- டெல்லி மற்றும் பிற இடங்களில் ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் இனவாததாக்குதல் கிடையாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தபட்ட தாக்குதல் இது கிடையாது.

சமூகவிரோத சக்திகளால் தானாக முன்னெடுக்கப்பட்ட கிரிமினல் தாக்குதல்களாகும். ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நிகழாமல்தடுக்க வளாகவிடுதிகளை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply