ஒருகுடும்பத்துக்கு, ஓராண்டுக்கு மருத்துவ செலவு ரூ. 5 லட்சம் என்று இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.பிரீமியம் தொகைக்கான செலவினத்தை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுக்கொள்ளும்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்படும்.

நாடுமுழுவதும் இந்தத் திட்டத்திற்குள் 10.74 கோடி பேர் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் படி, கிராமம் மற்றும் நகர்புறங்களில் இருந்து இந்த திட்டத்திற்கு பயனானாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தகுதிபெற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, ஒரு அறைமட்டும் கொண்ட வீட்டில் யார் துணையும் இன்றி வசிக்கும் 16 முதல் 59 வயதிற்குட்பட்ட பெரியவர் தகுதி பெறுகிறார்.

16 முதல் 59 வயதிற்கு உட்பட்ட ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பத்தினர், உடல் ஊனமுற்ற, மற்றும் வேலை செய்யும் உடல் திறன் இல்லாத உறுப்பினர் கொண்ட குடும்பங்கள், பழங்குடியின மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் குடும்பங்கள், நிலமற்றவர்கள், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், பிச்சை எடுத்து பிழைப்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் குடும்பத்தினர், பழங்குடியின குழுக்கள், சட்ட ரீதியாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் என ஊரகப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைவர்.

நகர் புறங்களில் வசிப்பவர்களில் 11 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

நோயாளிகள் எவ்வித ரொக்கமும் செலுத்த வேண்டிய தில்லை. காகித பரிவர்த்தனையும் இல்லாமல் இந்த திட்டத்தின்கீழ் பலன்கள் வழங்கப்படும்.

சிகிச்சை செலவை கட்டுப்படுத்த சிகிச்சைக்கான மொத்த செலவும் (அரசு முன்னதாகவே நிர்ணயித்துள்ளபடி) ஒரே தொகுப்பாக்கப்படும். இந்த தொகுப்புக்குள் சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களும் அடங்கும்.

ரத்தக்குழாய் அடைப்பு அறுவை சிகிச்சை, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் சிகிச்சைக்கான கட்டணங்கள் மத்திய அரசு மருத்துவமனைகளை விட இந்தத் திட்டத்தில் 15.20 சதவீதம் வரை குறைவாக இருக்கும்

Leave a Reply