*மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி    கலவரத்தில் ஈடுபட்டு சென்னையையும், கோவையையும் ஸ்தம்பிக்க வைத்த தேச விரோத சக்திகள்.*
 
1.  மே 17 இயக்கம் , முக்கியமாக திருமுருகன்  காந்தி கோஷ்டி
 
2.விடுதலைப் புலி ஆதரவு இயக்கம்.
 
3.  மக்கள் கலை இயக்க கழகம் எனப்படும் நக்சல் இயக்கம்.
 
4.  கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம் எனும் அந்நிய தேசத்திடமிருந்து நிதி பெறும் இயக்கம்.
 
 
6.  மக்கள் அதிகாரம் என்னும் கம்யூனிஸ்ட் குரூப்.
 
7. இஸ்லாமிய அடிப்படைவாத  ஜிகாதி அமைப்பு.
 
8. CPM (ML)
 
9.CPM(moaist)
 
10.தி.க
 
 
> இந்த இயக்கங்கள் எதற்கும் பொது ஜன ஆதரவு கிடையாது.
 
> இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஒப்புக் கொள்ளாதவை, பன்முகத் தன்மைக்கு எதிரானவை.
 
> இந்த இயக்கங்கள் அனைத்தும் அந்நிய நிதியால் நடத்தப்படுபவை, இந்திய இறையாண்மைக்கு எதிரானவை.
 
இவைகள் இணைந்து…
 
தானே கூடிய தன்னார்வத் தமிழனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்பும் அவர்களை கலையவிடாமல் தடுத்து அவசரச் சட்டம் தற்காலிகமானது என பொய் கூறி அங்கேயே சில மாணவர்களை தங்க வைத்தார்கள். அவர்களின் நோக்கம் குடியரசு தினத்தை சீர்குலைப்பதாகும். மேற்கண்ட இயக்கங்களின் நோக்கம் அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டிவிட்டு அரசை கவிழ்ப்பது தங்களின் சர்வாதிகார ஆட்சியை அமைப்பது, சிலரின் நோக்கம் பிரிவினை இவர்கள் மெரினாவில் எப்படியாவது போராட்டத்தை 26 தேதி வரை கொண்டு சென்று மாணவர்களிடம் இந்திய அரசுக்கு எதிரான கருத்துகளை திணித்து குடியரசு தினத்தன்று மாணவர்களை கருப்பு தினமாக அனுசரிக்க வைத்து, கொடி ஏற்ற விடாமல் தடுத்தால் உலகின் மிகபெரிய குடியரசு நாடான இந்தியாவிலேயே  ஒரு மாநிலத்தில் லட்சகணக்கான மானவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனர், தனி நாடு கேட்டு போராடினர் , அரசால் சுதந்திர கொடியை ஏற்ற முடியவில்லை என்ற செய்தி உலகம் முழுக்க பரவும்.மற்ற மாநிலத்தவர்கள்களுக்கு
 
 தமிழர்கள் மீது வெறுப்பு உண்டாகும், அவர்கள் தாக்கபடுவர், நாட்டின் பிற பகுதியில் இதே போன்று பிரிவினை கோஷங்கள் எழும், தமிழகத்தில் குடியரசு தினம் நடக்கவில்லையெனில் ராணுவம் அழைக்கப்படும், தேச துரோக அமைப்புகள் தேடும் பணி (combing) நடக்கும் போது பொதுமக்களுக்கு பெறும் இடையூறு, தொந்தரவுகள் ஏற்படும் அப்போது இந்தியா ஆதிக்க அரசு தமிழகர்களை சந்தேகபடுகிறது நசுக்குகிறது என்று கூறி இந்திய அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி பிரிவினையை மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கலாம்.இவர்கள் இதில் கைதேர்தவர்கள் காஸ்மீரும், வட கிழக்கு மாநிலங்களும் இதற்கு சாட்சி.போராட்டம் முழுக்க முழுக்க மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டலும் பின்னர் உடுருவியவர்கள் மூலமே தனித்தமிழ் நாடு, குடியரசு தினத்தை கருப்புத்தினமாக அனுசரியுங்கள், இந்தியாவை நிரகரிக்கிறோம் போன்ற whatsapp மெசேஜ்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டது.
 
மேலும்  குடியரசு தினத்தை நடத்த துணை ராணுவம் வருகிறது , நம்மை களைத்து விட்டு குடியரசு தின அணிவகுப்பு நடத்த உள்ளனர் என்ற தகவலை உலவவிட்டு மாணவர்களை கோபமூட்டினர்.
அடிக்கடி போலீஸ் அடிக்க திட்டமிட்டு உள்ளனர் என்ற செய்தியை  உலவவிட்டவர்களும் அவர்களே.
பின்பு அரசு வேகமாக  அவசர சட்டம் இயற்றுவதை கண்ட அவர்கள் உடனடியாக அவசர சட்டம் கண் துடைப்பு, அது ஏமாற்று வேலை, ஆறு மாதம் வரை மட்டுமே செல்லும், திங்கட்கிழமை peta தடை வாங்கும், கலைந்து செல்லவேண்டாம் என்ற செய்தியை அதிவேகமாக பரவவிட்டனர் அவர்கள்.மேலும் அவசர சட்டம் நிரந்தர சட்டம் ஆகப்போகிறது ,கூட்டம் கலைந்துவிடும் என்று உணர்ந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோல் போஸ்டை மாற்றினார்.
 
 
மத்திய உளவு துறை மூலம் குடியரசு தினத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக தகவல் கிடைத்ததால் போலீஸ் காலம் தாழ்த்தினால் ஆபத்து என்று உணர்ந்த காவல் துறை தமிழகமெங்கும் கூடி உள்ள கூட்டத்தை உடனே கலைக்க தொடங்கினர். தங்கள் திட்டம் தோல்வியை தழுவுவதை உணர்ந்த விரோதிகள் ice house காவல் நிலையத்திற்கு தீ வைக்கின்றனர். பல இடங்களில் மாணவர்களை தூண்டிவிட்டு கல்வீச்சு, காவலர்களை குறிவைத்து தாக்குவது கடைசியில் பெட்ரோல் குண்டு வீசி சென்னையை ஸ்தம்பிக்க வைக்கின்றனர்.93 காவலர்கள் காயம்,108 பேருந்துகள் சேதம், 57 போலீஸ் வாகனங்கள்  தீக்கரை ஆகிறது எல்லாம் ஒரே நேரத்தில். இதில் கவனிக்க பட வேண்டியது சென்னையில் ஒரு காவலர் போலீஸ் மட்டுமே இருக்கும் இடத்தில்  திடீர் என்று ஒருவர்  முகத்தில் துணி கட்டி கொண்டு போலீஸ் உடையில் வருகிறார், ஒரு ஆட்டோவிற்கு தீவைக்கிறார் அங்குள்ள போலீஸ் சுதாரித்து அவர் யார் என்று பார்ப்பதற்கும் ஒரு குடிசைக்கு தீ வைத்து அங்குள்ள சந்தில் ஓடி மறைகிறார், அவர் போலீஸ்சா இல்லை காஸ்மீர் , நாகாலாந்து போல்  போலீஸ் உடையில் வந்து நாசவேலையில் ஈடுபடும் மாவோயிஸ்ட்களா என்ற சந்தேகமும் எழுகிறது. 
 
தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் இந்திய பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும் பெரும் சதிவலை பின்னப்பட்டு உள்ளது. இதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு…ஏனோ தமிழ்நாட்டில் இதுபோன்ற அரசியல் சதிகாரர்கள் மிக அதிகம். அவர்களுக்கு ஊடகங்களின் ஆதரவு முழுமையாக உள்ளது.திராவிட இயகங்களின் ரத்தத்தில் தமிழனை தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் தடுக்க வேண்டும், தமிழனின் மத நம்பிக்கை குறைக்க வேண்டும், பண்டிகைகளை மதத்தில் இருந்து பிரித்து அவனை நாட்டின் பிற பகுதி மக்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியுள்ளது.
 
தமிழகத்தை திராவிட வெறியர்களும் சதிசெய்து 2 தலைமுறை மக்களை ஏமாற்றி ஒரு மாயையை தோற்றுவித்து உள்ளனர்.இந்தியாவை கைப்பற்ற இத்தாலிய ருசியா பாசிச வெறியர்களை ஒரு பிரதான தேசிய கட்சியை பல ஆண்டுகள் திட்டமிட்டு கைப்பற்றி இந்திய அராசியளின் ஒவ்வொரு நகர்வையும் கட்டுப்படுத்தி வந்தனர்,இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
 
ஆனால் சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும் என்பதை போல் ஒருமுறை கிடைத்த வாய்ப்பை 2014 ஆம் ஆண்டு இந்தியா மிக சரியாக பயன்படுத்திக்கொண்டது.பாரத்திற்காக 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி வாலிப ஆசைகளை துறந்து தன்னை நாட்டிற்கு அர்ப்பணித்த    பாரத புதல்வனை மக்கள் இனம் கண்டு தங்கள் தலைவன் ஆக்கிக்கொண்டனர்..இப்போதும் மீண்டும் அவரை 2019இல் அவரை அரியணை ஏற்றி அழகு பார்க்க தயாராகி விட்டனர். ஏனெனில் அவர் இந்த பழம்பெரும் நாட்டின் இழந்த பெருமைகளையும் கலாச்சாரத்தையும், செல்வ வளத்தையும் மீட்டு எடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடம் உருவாகியுள்ளது,அதற்கு அவரின் 2 1/2 ஆண்டு கால சாதனைகள் சாட்சி. 
 
ஆனால் சர்வதேச சதியால் ருசியா பாசிச சக்திகளிடம் தன் தலைமையை பறிகொடுத்த காங்கிரஸ் 2002 இல் ஒரு சாதாரண கலவரத்தை சில ஊடகங்களின் சக்தியாலும் ஊதி பெரிதாக்கி அரசே கட்டவிழ்த்து விட்ட கலவரம் போல் சித்தரித்து அவரை எல்லா இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் போல் காட்டி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வைத்து இன்றுவரை அவர்களை அவர் என்ன செய்தாலும் எதிர்க்கும் மனநிலைக்கும் அவர் பிரதமர் ஆகிவிட்டதால் விரத்தியும், நாட்டின் மீது தவறான கருத்தும் வளர காங்கிரஸ் காரணமாகி உள்ளது. இடதுசாரிகள் அவர் corporate களுக்கு ஆட்சி செய்கிறார் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றாலும் தமிழகத்தை தவிர்த்த இந்தியாவின்  எந்த பகுதியிலும் மக்கள் அவர்கள் சொல்வதை ஏற்பதாக இல்லை.
 
ஆனால் இங்கு காங்கிரஸ் இடாதுசாரிகளுடன் சேர்ந்து இன்னும் பல dravidian fanatics அவரை பொது எதிரியாக வைத்து ஊடகங்கள் துணையுடன் சேர்த்து தமிழன் உண்மையை உணரமுடியாமல் தங்கள் ஆதாயத்திற்காக மக்களிடம் தவறான கருத்தை பரப்புகின்றனர். இதற்கு ஒரு சிறிய உதாரணம் காவேரி மேலாண்மை வாரியம்….சமீபத்தில் காவேரி பிரச்சனை உச்ச கட்டத்தில் இருக்கும் போது உச்ச நீதிமன்ற நீதிபதி மத்திய அரசிடம் காவேரி மேலாண்மை வாரியம்  உடனடியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறார். உடனே மத்திய அரசின் வழக்கறிஞர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா வேண்டாமா தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் உள்ளது,அதில் இறுதி முடிவு அந்த தீர்ப்பாயம் (tribunal-ஒருவகையான நீதிமன்றம்) தான் எடுக்க முடியும்,மேலும் ஒரு வாரியம்(board) அமைக்க வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் தான் அதை சட்டமாக இயற்றி அமைக்க முடியும் அதனால் தற்போதைக்கு நடுவர் மன்ற தீர்ப்பு வரும் வரை மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றது மத்திய அரசு.
 
ஆனால் ஊடக செய்தி-அரசு நீதிபதி சொல்லியும் மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு. உடனே அரசியல் கட்சிகள் அறிக்கை மத்திய அரசு தமிழர்களை முதுகில் குத்திவிட்டது. இப்படிதான் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றனர். இப்படி தான் ஜல்லிக்கட்டு விவகாரம், UDAI மின் திட்டம் என்ன எல்லா விவகாரத்திலும் உண்மைக்கு மாறான தகவல்களை ஊடகங்களும் கட்சிகளும் தொடர்ந்து பரப்பிவருகின்றனர். அதன் விளைவு இன்று சிலர் காவேரி மேலாண்மை வாரியம் போன்றவற்றை காரணம்காட்டி சிலர் மாணவர்களை போராட்டம் செய்ய தூண்டும்போது அவர்கள் அவர்களுக்கு இரையாகுகின்றனர். ஊடகங்களும் அரசியல்வாதிகளும் உண்மையை சொல்லியிருந்தால் அவர்கள் கோல் போஸ்டை மாற்றும் போது மாணவர்கள் தெளிவாக நம் போராட்டத்தின் நோக்கம் இது இல்லை இந்த விவகாரத்தில் சட்ட சிக்கல் உள்ளது போராட்டத்தை திசை திருப்பாதீர்கள் என்று கூறி அவர்களை ஓடவிட்டு இருக்க முடியும்.
 
 ஒட்டுமொத்த நாடும் ஒருவர்ப்பின் அணிவகுத்து நிற்கிறது ஆனால் தமிழகத்தில் மட்டும் இல்லை ,இது பெருமை இல்லை எங்கோ தவறு நடக்கிறது என்று அர்த்தம்.தமிழக மக்கள் தேசியநீரோட்டத்தில் இணைய வேண்டிய கட்டாயம் அவசியமும் ஏற்பட்டு உள்ளது. உடனே கண்மூடித்தனமாக அப்படியே ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை….குறைந்தபட்சம் கட்சியினர்களும் , ஊடகங்களும் ,இணையத்தளத்தில் பிறர் சொல்வதை அப்படியே நம்பாமல் உண்மையை அறிய முயலுங்கள். இருசாரரின் நியாயங்களை கேட்டுவிட்டு முடிவெடுங்கள். தமக்கு நஞ்சு ஊட்டினாலும் தம்மவர் என்னும் கண்ணோட்டதால் அதைமறுக்காமல் உண்டு மடிவாணாம் தமிழன்…அதுபோல் இங்கு பலர் தமிழ்,திராவிடம்,பகுத்தறிவு,ஈழம்,தலித் விடுதலை போன்றவற்றை முன்னிறுத்தி உனக்காக அரசியல் செய்வதுபோல் பாவித்து உன்னையே வஞ்சிக்கிறான்.
 
மாதசார்பின்மை என்றால் பெரும்பான்மை மக்கள் சமய பற்று இல்லாமல் இருக்கவேண்டும் இருந்தால் தனக்குள்ள வைத்திருக்க வேண்டும் , வெளிப்படுத்துபவன் மதவாதி இதுதான் தமிழகத்தில் மதசார்பு இன்மை, ஆனால் சிறுபான்மையினர்க்கு தேவைக்கும் அதிகமான சலுகைகள்,உரிமைகள்.தமிழனைதன் மதத்தில் இருந்து பிரிக்க பிறந்ததே பகுத்தறிவு.முதல் மனிதன் தமிழன் என்று சொன்னவர்களுக்கு  ஹரப்பாவில் வாழ்த்த தமிழன் என்ற சிவ வழிபாட்டையும் பெண் தெய்வங்களியும் வழிபட்டான் என்று சொல்லவில்லை.எல்லாம் நாம் இந்திய மக்களுடன் கலக்க விடாமல் செய்த சூழ்ச்சி.
 
கடவுக்குக்கு விரதம் இருந்து உத்தரவு வாங்கி கோவிலின் வடிவாசல் வழியாக கோவில் காளையை அவிழ்த்துவிட்டு பிறகு விளையாடும் ஜல்லிக்கட்டை இன்று அடுத்த தலைவர் சமத்துவ ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் அதாவது அதில் இருந்து விரதம், உத்தரவு வாங்குவது, கோவில் காலை, மாட்டிற்கு பூஜை  போன்றவற்றை நீக்கி எங்கோ ஒரு இடத்தில் வடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டை நடத்தவேண்டுமாம், அதாவது கொஞ்ச நஞ்சம் உள்ள தமிழனின் 10,000 வருட மத நம்பிக்கையையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே நோக்கம்.
 
கடவுள் நம்பிக்கை உள்ளவர் மற்றும் இந்திய ஒற்றுமைக்காக பாடியதால் தமிழை உயிராக கொண்டுஇருந்த பாரதியார் தமிழ் பற்று இல்லாத ஆரிய வெறியர் என்றும்  ஆதி பகவான் என்ற திருவள்ளுவன் தங்க தட்டில் உள்ள மலம் என்றதுதான் பெரியாரிசம்-திராவிடம்-பகுத்தறிவு.ஆரியன் தனக்கு எதிராக பின்னப்பட்ட மாயவலையை அறுத்தெரிந்து தன் தலைவனை கண்டுணர்ந்து பயணிக்க தொடங்கிவிட்டான்.
 
*ஆரியன் தெளிந்து விட்டான் மற தமிழா நீ என்று?*

Leave a Reply