ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையைதொடர்ந்து பெங்களூரின், சிவாஜி நகர் பகுதியில் இன்று முழுகடையடைப்பு நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிவாஜிநகர் மண்டல் தலைவர், ருத்ரேஷ் நேற்று காலை நண்பர்களுடன் கடைத் தெருவில் பேசிக்கொண்டிருந்த போது வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
 
பைக்கில் வந்த இருவர் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர். அருகேயிருந்தவர்கள் அவரை, மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
கொலையாவதற்கு சற்று முன்புதான், சிவாஜி நகர் அருகேயுள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், ருத்ரேஷ் பங்கேற்று திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இந்து அமைக்களைச்சேர்ந்த பிரமுகர்கள் கொலைசெய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. சமீபத்தில் கேரளாவில் பாஜக பிரமுகர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கோவையில் இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார் இப்படியாக தொடர் படுகொலைகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply