தில்லியில் ஜாண்டேவாலன் பகுதியில், ஆர்எஸ்எஸ் சார்பில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஏழுமாடி கட்டடத்துக்கு, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டினார்.


பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:ஆர்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகத்துக்காக இந்தக் கட்டடம் கட்டப்படுவதால், பொது மக்களிடம் இருந்து எந்த நன்கொடையும் பெறவில்லை. இந்த கட்டடத்தை கட்டுவதற்கான ஒட்டுமொத்ததொகையும், ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் இருந்தும் நலன் விரும்பிகளிடம் இருந்தே பெறப்பட்டது.


இந்த பணி தொடங்கும் போது, போதுமான பணம் இல்லை. இருப்பினும் புதியகட்டடம் கட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற முன்வந்தனர் என்று மோகன் பாகவத்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஷ் கோயல், ஹர்ஷ வர்த்தன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply