ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்திணிப்பது இல்லை என டில்லியில் நடந்த எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் நடந்த ஆர்எஸ்எஸ்., கருத்தரங்கில் தலைவர் மோகன் பகவத் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., தனித்துவம் கொண்டது. இந்தஇயக்கத்தின் தரத்திற்கு இணையாக வேறு இயக்கம் இருக்கமுடியாது. எங்கள் கொள்கையை யாருக்கும் திணிக்க வில்லை. கொள்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ்.,இன்றுவரை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நாட்டின் கட்டமைப்புக் காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறோம். மக்களை இணைத்து செல்லவே விரும்புகிறோம். சமூகத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். ஆர்எஸ்எஸ்., வளர்ச்சி பலத்தைநிரூபிக்கிறது.

சிறைசெல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே நாம் பின்பற்றுகிறோம். ஆர்எஸ்எஸ்., சுக்கு விளம்பரம் தேவையில்லை. விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். இவை ஆக்கப் பூர்வமானதாக அமையும். நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே நமதுபலம். இவ்வாறு மோகன்பகவத் பேசினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *