காந்தியின் வழிகாட்டலோ அல்லது என்னுடைய மன சாட்சியோ ஆர்சிஈபி ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்க வில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு(Regional Comprehensive Economic Partnership (RCEP) மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். ஆர்.சி.ஈ.பி என்ற அழைக்கப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தம் 16 நாடுகளுக்கானது. அந்த 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். இந்த நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தை எளிமையாக்கும் வகையில் ஆர்.சி.ஈ.பி ஒப்பந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்பதுபோன்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், இன்று ஆர்.சி.ஈ.பி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்பேசிய பிரதமர் மோடி, ‘ஆர்.சி.ஈ.பியின் புதிய ஒப்பந்தம் ஆர்.சி.ஈ.பியின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக உள்ளது. இதுகுறித்து, இந்தியவின் விவசாயிகள், வர்த்தகர்கள் தொழிலதிபர்களுக்கு முடிவெடுக்க உரிமைஉள்ளது. எல்லாதரப்பு இந்தியர்களின் விருப்பம் சார்ந்து இந்த ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தம் குறித்து அளவீடும் போது, எனக்கு நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. காந்தியின் வழிகாட்டுதலிலோ அல்லது என்னுடைய மன சாட்சியோ இந்த ஒப்பந்தத்தில் இணைவதைத் தடுக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.