நாங்குநேரி, விக்கிர வாண்டி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப் பூர்வமான அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருப்பத்தூரில் நடைபெற்ற மருது பாண்டியர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்.தாதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் எங்கள் கூட்டணியான அதிமுக வெற்றிபெற்றது மகிழ்ச்சி. இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் முக்கிய காரணம். பாஜகவை தமிழக்திதல் உள்ள ஒவ்வொருவரும் எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி தொடர்வது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அதிகாரிகளையும் காட்டிக் கொடுத்தால், அவர்கள் மீதும் தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்திலும் பாஜக முன்னிலை பெற்றிருப்பது மகிழ்ச்சியானது என்று கூறியவர், அந்த மாநிலங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும் என்று கூறினார்.

Comments are closed.