தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
 
செய்தியாளர்களிடம் கூறுகையில்,காவிரி நீர்பிரச்சினைக்காக தி.மு.க. நடத்தியது அரசியல் சார்புடைய அனைத்து கட்சிகூட்டம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனிற்காக நிறைய நல்லகாரியங்களை செய்துள்ளது.
 
ஒட்டுமொத்த விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக இருப்பதுபோல் பொய்பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்பமாட்டார்கள். பொய்பிரசாரத்தை முறியடித்து தஞ்சாவூர் உள்பட 3 தொகுதிகளிலும் பாஜக. வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் வைகோ, 3 தொகுதி இடைத் தேர்தலை புறக்கணித்தது ஏன் ? எனவும் கேள்வி எழுப்பினார் தமிழிசை

Leave a Reply