2019 இல் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நரேந்திர மோதிஜிக்கு 272 இடங்களில் கண்டிப்பாக பிஜேபி ஜெயித்திருக்க வேண்டும்..!

265 இடங்கள் கிடைத்தால் கூட அவர் எதிர்கட்சியாகத்தான் இருக்க வேண்டும்..!

இது இப்படி இருக்க… ஒருவேளை காங்கிரஸுக்கு 136 இடங்கள் கிடைத்தாலே ராகுல் காந்தி பிரதமராகி விடுவார்..! பிரதமராக குறைந்த பட்சமாக 200 இடங்களாவது கிடைக்க வேண்டும் என்கிற அவசியம் கூட அவருக்குக் கிடையாது..!

சோனியா காந்தி வெறும் 145 சீட்டுகளை வைத்துக் கொண்டு 10 வருஷம் இந்தியாவில் கோலோச்சினார்..!

இதுதான் … இப்படித்தான் காங்கிரஸ் ஊழல் அமைச்சர்களை உருவாக்கி.. அவர்கள் தங்கள் பங்கிற்கு ஊழல் அதிகாரிகளை உருவாக்கி… அவர்களும் தங்கள் பங்கிற்கு ஊழலை மக்களிடையே நீக்கமற நிறையச் செய்து… இப்போது ஊழல் என்பதும், அரசாங்கத்தை ஏமாற்றுவது என்பதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகிவிட்டது.

திடீரென்று மோதிஜி பிரதமராகி டீமானிடைசேஷன் என்று அறிவித்ததும், மாத சம்பளம் வாங்குபவர்கள் தவிர, பணமாகக் கல்லா கட்டுபவர்கள்.. அதாவது, டாக்டர்கள், ஆடீடர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், மேடைப் பேச்சாளர்கள், சினிமாக்காரர்கள், நடிகர்கள், பைனாஷியர்கள், வாத்தியார்கள், ட்யூஷன் டீச்சர்கள், மருத்துவமனைகள், என்று எங்கெல்லாம் பணப்புழக்கம் இருந்ததோ, ஹாட் கேஷாக யாரெல்லாம் பணம் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தை வரி கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் கோபமான கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

இவர்கள் வரி கட்டாமல் ஏமாற்றியது சரி போலவும், இப்போது பணப் பரிவர்தனையில் மோதிஜி ஒரு ஒழுங்கு கொண்டு வந்தது தவறு போலவும் எல்லோருக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது…!

அதனால் மட்டுமே இப்போது கர்னாடகா தேர்தலில் இவர்கள் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொண்டு சுய அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

முதலில்.. பிஜேபி ஆட்சி அமைத்தால் குதிரை பேரம் நடக்கும். அதனால் அமைக்கக் கூடாது என்றனர். பிறகு எடியூரப்பா ராஜீனாமா செய்ததும் இதை வெள்ளிக்கிழமையே செய்திருக்கலாம் என்று அடுத்தவர் முதுகுகளையும் சொறிய ஆரம்பித்தனர்.

பிறகு தற்போது இவ்வளவுதான் அமீத் ஷா, மோடியின் யோக்யதையா…, சாணக்கியத்தனமா.. என்று கனைத்துக் கொண்டே சிரிக்கிறார்கள்..!

இவர்களுக்கு என் ஒரே பதில்… போடா போக்கத்தப் பசங்களா… ! உலகம் முழுவதும் சுற்றி எத்தனையோ மரியாதைகளை வாங்கிக் கொண்டிருக்கும் மோதிஜிக்கு உங்களைப் போன்ற தறுதலைகளின் சர்டிஃபிகேட் தேவையில்லை.முதலில் தனியாக உட்கார்ந்து கொண்டு.. இதுவரை அரசாங்கத்தை வரி கட்டாமல் ஏமாற்றிய கணக்கைக் கண்டுபிடி. உன் மனதுக்காவது நேர்மையாக இரு.. ஏன்னா.. எப்படியும் உங்கள் ஓட்டு அவருக்கில்லை. உருப்படியா மத்தவங்களை வேலை செய்ய விடுங்க என்பதுதான்..!

Leave a Reply