கருப்புபணத்திற்கு எதிராக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது ஆரம்பம் என்றும், இதுபோன்ற நடவடிக்கை இன்னும்தொடரும் என்றும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதில் பரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

அவர் கூறுகையில் இம்மாததொடக்கத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நான் அறிவித்தது ஏழைகளுக்கான நடவடிக்கை. கருப்புபணம், ஊழல் போன்றவற்றை ஒழிப்பதற்கான நடவக்கைகள் இன்னும் தொடரும் . மேலும் பிஜேபி அரசின் மக்கள் நலத்திட்டங்களை எம்பிக்கள் அனைவரும் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.


நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில்: பிரதமர் நரேந்திரமோடி வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்து நாட்டில் புதியஇயல்பை உருவாக்கியிருக்கிறார். இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும் என்றார். முன்னதாக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவுதெரிவித்தும், பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply