ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் நடந்த ஹவ்டி மோடி, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மோடி பேசும்போது, இந்நிகழ்ச்சியின் மூலம் புதியவரலாறு படைக்கப்படுகிறது என்றார்.

மோடி பேசியதாவது: குட் மார்னிங் ஹூஸ்டன்,அமெரிக்கா, நண்பர்களே, டிரம்புக்கு அறிமுகம் தேவையில்லை. உலகஅரசியல் தீர்மானிப்பவராக இருக்கிறார் டிரம்ப். ஒவ்வொரு வீட்டில் உள்ளவருக்கும் தெரிந்தவர். அவரை மேடைக்கு அழைப்பதில் பெருமைகொள்கிறேன். ஒவ்வொரு முறையும் டிரம்பை சந்திக்கும்போத உற்சாகம்வருகிறது.நட்பை பாராட்டக் கூடியவராக, அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கவராக மாற்றியவர் டிரம்ப்.

வெள்ளை மாளிகைக்கு இந்தியா உண்மையான நட்புடன் இருந்துவருகிறது. அமெரிக்காவின் உண்மையான ந ண்பன் இந்தியா என டிரம்ப் கூறினார். இருநாடுகளுக்கான நட்புறவு உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு இருப்பது சிறப்புக்குரியது. இந்த சந்திப்புமூலம் புதியவரலாறு படைக்கப்படுகிறது.2017 ல் என்னை அவரது குடும்பத்திற்கு அறிமுகம் செய்தார் டிரம்ப். இப்போது நான் எனது குடும்பத்தை (இந்தியர்களை) அவருக்கு அறிமுகம் செய்கிறேன்.

கடந்த 5ந்து வருடத்தில் 100 லட்சம் கோடியை  உள்கட்டுமானதில் முதலீடு செய்துள்ளோம், நிச்சயமற்ற உலக பொருளாதாரத்தின் மத்தியில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுளோம். மேலும் இந்திய பொருளாதாரத்தை  ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கி வேலை செய்து கொண்டு இருக்கிறோம்.

அமெரிக்காவின் உலக வர்த்தகத்தை தகர்த்தவர்களும், மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களும் ஒரே இடத்தில தான் ஒளிந்து இருக்கிறார்கள்.தீவிர வாதத்துக்கு ஆதரவு கரம் நீட்டுபவர்களை களையெடுக்க இதுவே சரியான தருணம் என்றார்.

 

Comments are closed.