அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கபடுவது குறித்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி.
இது குறித்து தெரிவித்துள்ள பாஜக தேசிய துணைத்தலைவரும், ராம்ஜென்ம பூமி இயக்கத்தின் முதன்மை தலைவருமான உமா பாரதி “இது ராம ராஜ்ஜியத்துக் கான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
150 ஆண்டுகாலமாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பு வெளியானது.
அதன்படி ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அல்லது ஒருஅமைப்பு நிறுவப்பட வேண்டும். இந்நிலையில் அந்த அமைப்பு நிறுவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது, “அயோத்தியில் வக்புவாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. ராமர் கோயில்கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் அமைய இருக்கிறது. இதற்கான திட்டம் தயாராக உள்ளது”