காங்கிரஸ் புகார் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது: கோவா மக்கள் அளித்ததீர்ப்பை பாஜ திருடிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களது இந்தபுகார் மிகவும் அதிகப்படியான ஒன்று. உச்ச நீதிமன்றம்கூட அவர்களது மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களவையிலும் அவர்கள் இந்த குற்றச்சாட்டை எழுப்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? கோவா சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் ஒருமுடிவு எட்டப்படவில்லை. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வில்லை. தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் தேர்தலுக்கு பிந்தையகூட்டணி உருவாக்கப்பட்டது.

பாஜ அந்த கூட்டணியை உருவாக்கி 40 எம்எல்ஏக்களில் 21 எம்எல்ஏக்கள் ஆதரவுபட்டியலுடன் கோவா கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரியது. அதன் அடிப்படையில் கோவா கவர்னர் புதியமுதல்வராக  மனோகர் பாரிக்கரை நியமித்தார். இதைத்தான் ஜனநாயக படுகொலை நடந்துவிட்டதாக கூறி காங்கிரஸ் போராட்டம் நடத்திவருகிறது. 21 எம்எல்ஏகள் ஆதரவை மனோகர் பாரிக்கர் வைத்துள்ளதால் தான் 17 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள சிறுபான்மை காங்கிரசை கவர்னர் அழைக்க வில்லை. கவர்னரின் இந்த முடிவு சரியானது. இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

1. 2005ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 இடங்களில் பாஜக 30 இடங்களில் வென்றது. ஆனால் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

2. 2002ல் காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி 28 இடங்களில் வென்றது. அப்போது 15 இடங்களில்வென்ற பிடிபி மற்றும் 21 இடங்களில் வென்ற காங்கிரஸ்கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

3. 2013ல் டெல்லியில் பாஜ 31 இடங்களில் வென்றது. ஆனால் 28 இடங்களை மட்டுமேவென்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிஅமைத்தது.இதேபோன்ற நடைமுறைகள் 1952ல் தமிழகத்திலும், 1967ல் ராஜஸ்தானிலும், 1982ல் அரியானாவிலும் நடந்துள்ளன.

கோவா கவர்னரிடம் 21 எம்எல்ஏக்கள் ஆதரவுடன்சென்று பாரிக்கரை தலைவராக தேர்வு செய்து பட்டியல் வழங்கியது பாஜ மட்டும்தான். 17 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள காங்கிரஸ்ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. கவர்னரிடம் குறைந்தபட்சம் அதற்கான ஒரு மனு கூட அவர்கள் கொடுக்கவில்லை. சட்டப்பேரவை தலைவரைக்கூட அவர்கள் தேர்வுசெய்யவில்லை. அப்படி இருக்கும் போது காங்கிரசை எப்படி கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்? இந்தவிவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த உத்தரவு சரியானது என்று நான் நினைக்கிறேன். பாஜ.வுக்கு போதுமான பெரும்பான்மை உள்ளது.

Leave a Reply