2 நாள் அரசு முறைபயணமாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார். இன்று கொழும்பு பண்டாரநாயக ஹாலில் சர்வதேச புத்த பூர்ணிமா கொண்டாட்டம் (வெசாக் தின கொண்டாட்டம்) நடைபெற்றது.

அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த விழாவில் இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வெளிநாட்டு தூதர்கள், அரசியல் பிரமுகர்கள், சர்வதேச புத்த மத தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற ஏராளமான புத்த பிட்சுகள் சுலோகங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்தனர். அப்போது கைகளைகுவித்து வணங்கியபடி கண்களை மூடிய நிலையில் பிரதமர் இருந்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

நான் புத்தர் அவதரித்த இந்தியமண்ணில் இருந்து 125 கோடி மக்களின் வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இந்திய புத்தர் அவதரித்தபூமி.

இந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது. நமது பிராந்தியம் மதிப்பிடமுடியாத புத்தரையும், அவரது போதனைகளையும் உலகத்துக்கு பரிசாக வழங்கியுள்ளது. வெறுப்பும், வன்முறையும் உலக அமைதிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இரு நாடுகளும் வன் முறையை வெறுப்பதில் ஒன்றாக இருக்கிறோம். நாம் நண்பர்களாக உள்ளோம். 22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தர்கூறிய அறிவுரை தற்போது 21-ம் நூற்றாண்டிலும் நமக்கு பொருத்த மானதாக உள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னோக்கிசெல்கிறது.

இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா முழு உதவிசெய்யும். வருகிற ஆகஸ்டு மாதத்தில் கொழும்பு- வாரணாசி இடையே ஏர் இந்தியா விமானசேவை தொடங்க உள்ளது. இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

Tags:

One response to “இந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது”

Leave a Reply