பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என அழைப்பதில் பெருமை அடையாதவர் தங்களை
 இந்தியர் எனச் சொல்லக்கூடாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வில் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார்.    தனதுஉரையில் இந்தியாவில் கடும்பிளவு இருந்ததாகவும் இந்தநாட்டின் தந்தையாக அவர் அந்தப் பிளவுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, “பிரதமர் மோடி தாம் கலந்துக்கொண்ட ஹவ்டி மோடி நிகழ்வை அவர் டிரம்புக்கு பிரசாரம் செய்ய பயன்படுத்தி உள்ளார்.   இது மிகவும் தவறான செய்கையாகும்.   மகாத்மா காந்திக்குப்பதில் தன்னை இந்தியாவின் தந்தையாக அவர் முன்னிலைப்படுத்திக் கொண்டதும் தவறானதாகும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், “அமெரிக்க அதிபர் டிரம்ப் நமது பிரதமரை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்துள்ளார்.   இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இவ்வாறு பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை எனக் கூறுவதில் பெருமை அடையாதவர்கள் தங்களை இந்தியர்கள் என சொல்லிக் கொள்ளக்கூடாது. ” என்றார்

Comments are closed.