உலக அளவிலான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடுகளில் நமது நாட்டின் பங்களிப்பு 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. கல்வித்துறைக்கு மத்திய அரசு இருபெரும் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தலா 10 பொது மற்றும் தனியார் கல்விநிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கல்வியையும், ஆராய்ச்சி படிப்பையும் பெறும்வசதிகளை ஏற்படுத்துகிறது.

போக்குவரத்திலும், மனித வள மேம்பாட்டிலும் பெரியளவில் முன்னேற்றத்தை நாடுசந்தித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள பெருநிறுவனங்களிலும் இந்தியர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், மாஸ்டர்கார்ட், பெப்ஸி கோ, காக்னிசண்ட், நோக்கியா என அனைத்து முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளிலும் இந்தியர்களே இருக்கின்றனர். இதுவே இந்தியாவின் மனிதவளத்துக்கும், வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டு.


இந்தியாவின் பாரம்பரியம், கலாச் சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டம் இது. அதற்கான முயற்சியை கல்வி நிறுவனங்கள் கையில் எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிறமொழிகளை விட தத்தம் தாய்மொழிகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஆங்கிலம் நல்லமொழிதான். ஆனால் அதைவிட தமிழ்மக்கள், தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இப்போதுள்ள நிலையில் கம்யூனிஸ்ட்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வைகோ போன்றவர்கள் காலாவதியாகி விட்டனர். திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள் மாறி, மாறி பார்த்து சலித்துவிட்டனர். அய்யா, அம்மாவுக்கு அடுத்து ‘பையா’ (மோடி அண்ணா என்பதை இந்தியில் பையா எனக் குறிப்பிட்டார்) ஆட்சி தமிழகத்தில் அமைய இருக்கிறது. பாஜக மட்டுமே நிலைத்த, நீடித்தஆட்சியை வழங்க முடியும். இந்தியாவில் உள்ள கட்சிகள், பலபெயர்களில் பிரிந்து கிடக்கும் வேளையில் பாஜக மட்டுமே நிலையாக, ஒரேபெயரில் 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரியகட்சியாக விளங்குகிறது

 

நன்றி வெங்கையா நாயுடு

Leave a Reply