இந்தியாவின் மரியா தையை பிரதமர் நரேந்திர மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தி யுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலம் மேதினி நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்தியாவின் பெயரை இரண்டே ஆண்டுகளில் உலகரங்கில் கொண்டு சேர்த்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு, இந்தியாவுக்கு உலக நாடுகள் தற்போது மிகுந்த மதிப்பளி க்கின்றன. அதேபோல், அமெரிக்காவும், இந்தியாவும் சம அந்தஸ்துகொண்ட நாடுகளாக பேச்சு நடத்துகின்றன. இந்தியாவின் மரியாதையை சர்வதேச தரத்துக்கு பிரதமர் உயர்த்தியிருக்கிறார்.

இது வரை இவ்வாறான பெருமை வேறு எந்த இந்தியத்தலைவர்களுக்கும் கிடைத்ததாக தெரியவில்லை. இந்தியாவின் மீதான நன்மதிப்பு வளர்ந்துவருவதையே இது காட்டுகிறது.

வளர்ச்சி என்ற ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு மோடி செயல்படு வதாலேயே இந்தியாவுக்கு வளர்ச்சி கிட்டியுள்ளது என்றார் பாஸ்வான்.

Leave a Reply