இந்தியாவின் முதன்மை கட்சியாக பாஜக. திகழ்ந்து வருவதாக கேரளாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பாஜக தேசிய நிர்வாக குழுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: சிறப்பான வரவேற்பு அளித்த பாஜக, தொண்டர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கேரளமக்கள் நாடு முழுவதும் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.
 
கேரளாவை நினைத்தாலே அது கடவுளின் நாடு என்பதுதான் நினைவுக்குவரும். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து விழாமேடை வரையில் திரண்டிருந்த மக்களைக் கண்டு வியப்படைந்தேன். வளைகுடா நாடுகளில் கேரளமக்களின் பங்கு மதிக்கதக்கதாக உள்ளது. அங்கு பணி புரிபவர்களில் கேரள மக்களே அதிகம். அவர்களை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரளமக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும். ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் உயர்வில் மத்திய அரசு கவனம்செலுத்துகிறது. இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. நான் தேர்தல் அரசியலில் நுழையும்முன் பா.ஜ.க,வில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றேன். கட்சி தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் ஒரு போதும் வீணாகி விடாது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Leave a Reply