இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன், அருண்ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பட்ஜெட்டில் குறிப்பிட்டபடி வங்கிகள் வரிகளை குறைப்பது அவசியம் என தெரிவித்தார். மேலும் மக்கள்பயனடையும் வகையில் வங்கிகள் வட்டிகளை குறைக்கவேண்டும் எனவும் கூறினார். இதுகுறித்து வங்கிகளுடன் ஆலோசிக்கப் பட்டுள்ளது. தற்போது முடிவு வங்கிகளின் கைகளில்தான் உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அருண்ஜெட்லி, எனது அனுபவத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்துவருகிறது. குறைந்த வட்டிவிகிதம் கொண்ட பெரிய வங்கிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இந்தியாவுக்கு அவசியம் என கூறினார். அவை நிதி அளவில் பலம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார். இந்தியாவின் வருவாய் அதிகரித்து வருவதால் அதிக அளவிலான பெருவங்கிகள் தேவை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.