இந்தியாவில் அறிவியல் ஆராய்ச் சிகளை எளிதாகசெய்ய முடியும் என்ற நிலையை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக் கழகத்தில் உள்ள ‘மானசா கங்கோத்ரி’ வளாகத்தில், 103-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. ஐந்துநாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பலநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசியதாவது:

இந்தியாவில் எளிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதே வேளையில், பொருளாதாரம், சுற்றுச் சூழல், எரி சக்தி, பிறர் உணர்வுகளை மதித்தல், நேர்மை உள்ளிட்ட 5 முக்கிய கொள்கைகளை விஞ்ஞானிகள் கடைபிடிக்க வேண்டும். மேலும், மத்திய அரசும் மாநில அரசுகளும், மாநிலங்களில் உள்ள நிறுவனங்களும் இணைந்து அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறோம். கூட்டுறவு, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கு நகரங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால், சர்வதேச அளவில் எரிசக்தி தேவையில் மூன்றில் 2 பங்குக்கும் அதிகமாக நகரங்களுக்கு தேவைப்படுகிறது. இதனால் பசுங்குடில் வாயுக்கள் 80 சதவீதம் அளவுக்கு வெளியேறு கின்றன. இந்தப் பிரச்சினைக்கு விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டும்.

நகரங்களை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரவேண்டும். மேலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், எல்லோராலும் எளிதில் கடைபிடிக்ககூடிய வகையில் திடக்கழிவுகளை திறம்பட கையாளும் உத்தியை கண்டுபிடிக்க வேண்டும். இந்தபூமி நீடித்து நிலைக்க, இந்த நிலத்தில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதைமட்டும் சார்ந்திருக்கவில்லை. கடல்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தும் இந்த பூமியின் எதிர் காலம் அடங்கி உள்ளது. அதனால்தான் நாங்கள் கடல் பகுதிகளில் (அல்லது நீல பொருளாதாரம்) மத்திய அரசு அதிக கவனம்செலுத்தி வருகிறது.கடல்சார் அறிவியல் வளர்ச்சிக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்காக இன்னொரு புரட்சியை தொடங்கி வைத்திருக்கிறோம். மனிதகுல மேம்பாட்டுக்காவும், நாட்டின் பொருளாதாரத்துக் காகவும் இந்த அறிவியல் புரட்சி பயன்படவேண்டும். உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்கசெய்திருக்கிறோம். தரமான வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையை மக்களுக்கு அளித்திருக்கிறோம்.

நமது டிஜிட்டல் நெட்வொர்க் தரமான அளவில் பொது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கிவருகிறது. ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் இது அதிகரிக்கப் பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க மட்டுமல்ல பருவ நிலை நீதி கிடைக்கவும் செய்யவேண்டும். இதற்காக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரி சக்தி தொழில்நுட்பம் வரவேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மிககுறைந்த விலையில், நம்பகத்தன்மையோடு, எளிதாக மின்பாதைகளில் இணைக்கும் வகையில் கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:

Leave a Reply