அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த முகமது பின் சல்மானை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு வீரர்களின் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். அதன்பின் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த்தை முகம்மது பின் சல்மான் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி- சவுதி இளவரசர் சல்மான் ஆகியோர் சந்தித்துபேசினர். இந்த ஆலோசனையின் போது, பாகிஸ்தான் பயங்கர வாதத்துக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

இதில் இந்தியாவில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பயங்கர வாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply