இந்தியாவில் நடைமுறையில் உள்ள 18 கோடி வாகனஓட்டுனர் உரிமங்களில் சுமார் 5 கோடியே 40 லட்சம் (மூன்றில் ஒருபங்கு) உரிமங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. தற்போது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, போலிலைசென்ஸ் வைத்துகொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு வெறும் ஐநூறு ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப் படுகிறது.

இந்த அபராதத்தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்துவதுடன் ஓராண்டு சிறை தண்டனையையும் சேர்த்துவிதிப்பது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 18 வயதுக்கு குறைவானவர்கள் லைசென்ஸ்பெறாமல் வாகனம் ஓட்டினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், அந்தவாகனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிசீலிக்கப் படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கான புதிய சட்டமுன்வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்தியஅரசு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

Leave a Reply