இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா கண்டித் துள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க்டோனர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டுவதற்கு தங்கள் மண் பயன்படுத்தப் படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். தங்கள் நாட்டில் செயல் படும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், அனைத்து பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானையே தற்போது பயன் படுத்தி வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவுடனான உறவு மேம்படுவதற்கு பாகிஸ்தான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பதற்றத்தைத்தணிக்கவும் சகஜமான ஒத்துழைப்பு மற்றும் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றார் டோனர்.

Leave a Reply