ராகுல் காந்தி தலைமையில் செயல்படும் காங்கிரஸ்கட்சி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதிகளை காட்டிலும், ராணுவ நடவடிக்கைகளில்தான் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் பேசியிருப்பதும். காஷ்மீருக்கு விடுதலை அளிக்கவேண்டும் என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவா் சைபுதீன் சோஸ் பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

சோனியா காந்தியின் ஆசியுடன், ராகுல் காந்தியின் தலைமையில் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது. இந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் விருப்பம். 

ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தேசம்குறித்து காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பார்வையில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குலாம்நபி ஆசாத்தின் கருத்துக்கள் பொறுப்பற்ற வகையிலும், வெட்கக்கேடான வகையிலும் உள்ளன. இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றறச் சாட்டுக்கு ஆசாத்தின் கருத்துக்கள் பக்கபலமாக அமையும்.

காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்துக்கு பாதுகாப்புதுறை அமைச்சரும், ராணுவ தளபதியும் சென்று ஆறுதல் கூறியதை குலாம் நபி ஆசாத் நாடகம் என்கிறார். இதைவிட வெட்கக்கேடான ஒருவிஷயம் இருக்க முடியுமா? 

மோடி மீது கொண்டவெறுப்பால், ராணுவ வீரா்களுக்கான மரியாதை, அவா்களது வீரம் போன்ற விஷயங்களில் காங்கிரஸ்கட்சி சமரசம் செய்துகொண்டுள்ளது. குலாம் நபி ஆசாத் மற்றும் காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று கூறிய சைபுதீன்சோஸ் ஆகியோர் மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா?

இந்த தலைவா்களை போன்றே ராகுல் காந்தியிடமும் நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது. தேசத்துக்கு விரோதமாக குரல் எழுப்பிய ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவா்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தவரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா துல்லியதாக்குதல் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியதும் இதேராகுல் காந்திதான் .

பாஜக ஆட்சியில் அதிக அளவிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2012 மற்றும் 2013 முறையே 72, 67 பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர், பாஜக ஆட்சிக்குவந்த 2014-இல் இது 110-ஆக அதிகரித்தது

2015-இல் 108 பயங்கரவாதிகளும், 2016-இல் 150 பேரும், 2017-இல் 217 பேரும் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டு மே மாதம் வரையில் 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நன்றி ரவிசங்கர் பிரசாத்

மத்திய அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *