இந்தியா 2024ம் ஆண்டுவாக்கில் 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உயர்வதை சாதிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு மாநிலமும் தங்களது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த மாநிலங்களின் அக்கறைகளைக்கு பதிலி அளித்த பிரதமர் மோடி விவசாயத் துறையில் அமைப்புசார் மாற்றங்களுக்கு உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

“இந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாற்றுவது என்பது பெரியசவால் ஆனாலும் உறுதியாக இதைச்சாதிக்க முடியும்” என்று கூறியுள்ளார் மோடி. இதற்கு மாநிலங்கள் தங்கள் பொருளாதாரதை 2 முதல் 2.5 மடங்கு வரை உயர்த்தவேண்டும். மாவட்ட மட்டம் முதல் ஜிடிபி இலக்கை நோக்கி பணியாற்ற வேண்டும். இதன்மூலம் சாமானிய மனிதனின் வாங்கும் திறன் அதிகரிக்கும். ஏற்றுமதிகளை அதிகரிக்கும் திறன்கள் குறித்து மாநிலங்கள் சிந்திக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

இந்தகூட்டத்தில் பஞ்சாப், இமாச்சலம், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநில முதல்வர்கள் நீங்கலாக பிற மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

அதே போல் நாட்டின் வேளாண் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேளாண் சீர்த்திருத்தங்களுக்காக சில முதல்வர்கள் அடங்கிய உயர் மட்ட குழுவின் தேவையிருப்பதாக வலியுறுத்திய பிரதமர், வேளாண் வளர்ச்சியில் ஒட்டுமொத்த அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றார்.

நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ்குமார் மேலும் கூறும்போது, வறட்சி நிவாரணம் மற்றும் மழை நீர் சேகரிப்பு கூட்டத்தின் முக்கிய அங்கமாக, விவாதப் பொருளாக இருந்தது.

“இடது சாரி தீவிரவாதத்தின் புவியியல் சார்ந்த தாக்கம் சுருங்கிவிட்டது, வன்முறைகளைத் தூண்டுவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. மேலும் மாநிலங்கள் இதுகுறித்து சரியான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு உதவும் ஆகவே அடுத்த 10 ஆண்டுகளில் இந்தவிவகாரம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தி யுள்ளார்” என்று நிதி  ஆயோக் கூட்டம் பற்றிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.