மத்தியசாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை மந்திரி நிதின்கட்காரி ஐக்கிய அரபு எமிரேடில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட் தொழில்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்காக பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவரித்தார்.

மேலும் கட்காரி பேசிய தாவது:-

இந்தியா உலகின் பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் முக்கிய நாடாக விளங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்தியாவில் தொழில்செய்வது தொடர்ந்து மிகவும் சுலபமாகி வருகிறது.

 


மத்திய அரசு சாலை மற்றும் நெடுஞ் சாலைகள் போக்குவரத்தில் மேம்பாட்டு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. தேசியநெடுஞ்சாலை ஏஏஏ தரத்தில் உள்ளது. கப்பல் போக்குவரத்து வசதியும் சிறப்பான முறையில் உள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் ஐக்கிய அரபுஎமிரேடின் முதலீடு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், நிதின்கட்காரி ஐக்கிய அரபு எமிரேட் தொழிலதிபர்களின் முதன்மை இயக்குநர்கள் மற்றும் பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

நிதின்கட்கரி உடன் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் சென்றார். இவர் ஐக்கிய அரபு எமிரேட் மூத்த அமைச்சர்களுடன் மற்றும் அபுதாபி முதலீட்டு துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply