நரேந்திரமோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததன் மூலம்  இந்தியா மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாடாக மாறி விட்டது, அவருக்கு என்னுடைய மன மார்ந்த வாழ்த்துக்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஜப்பானின் ஒசாகநகரத்தில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறும் சமயத்தில் இருவரும் சந்தித்துபேசும் சமயத்தில் இரு தரப்புக்கும் இடையில் உள்ள வர்த்தக பிரச்சனைகள் குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக் இறக்குமதி செய்வதற்கு இந்தியா அதிகப்படியானவரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ட்ரம்ப் நேரடியாகவே இந்தியப் பிரதமரிடம் மோடியிடம் தன்னுடைய அதிருப்தியை வெளிப் படுத்தினார். இதையடுத்து ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித இறக்குமதிவரியை 50 சதவிகிதமாக குறைத்தார்.

இருந்தாலும் திருப்தி அடையாத ட்ரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான இறக்குமதிவரியை 25 சதவிகிதமாக அதிகரித்தார். இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் பாதாம்பருப்பு உள்ளிட்ட 29 பொருட்களுக்கான இறக்குமதிவரியை அதிரடியாக உயர்த்தியது.

இறக்குமதி வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்தாலும் உடனடியாக அதை நிறைவேற்ற வில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் இறக்குமதி வரிஉயர்வு அமலுக்கு வரும் என்று இந்தியா அறிவித்தது. இருந்தாலும் நல்லெண்ண அடிப்படையில் வரிஉயர்வை அடுத்தடுத்து ஒத்தி வைத்தது.

இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த கடந்த 6ஆம் தேதி இந்தியா வந்த அமெரிக்க வர்த்தகசெயலாளர் வில்பர் ரோஸ், அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா கொடுத்து வரும் நெருக்கடிகளையும் வர்த்தகத் தடைகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். இதன்காரணமாக இறக்குமதி வரி உயர்வை கடந்த 16ஆம் தேதியிலிருந்து வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் வாழ்த்து   அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய வாழ்த்துச்செய்தியை ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அதில்,

பிரதமர் மோடியின் மிகப்பெரிய அரசியல் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, உங்களை பிரதமராக தேர்ந்தெடுத்ததன் மூலமாக இந்திய மக்கள் அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்களாக மாறிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வரும் ஜூன் மாதம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி-20 (G-20) மாநாட்டில் பங்கேற்கும் சமயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசப்போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இருநாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் இறக்குமதி வரிவிதிப்பு உள்பட அனைத்து வர்த்தகப் பிரச்சனைகளுக்கும் பேசிமுடிவெடுக்க பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவின் நண்பராக விளங்கும் நரேந்திர மோடியும் அவருடைய கூட்டாளிகளும் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இது இந்தியமக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. வரும் நாட்களிலும் நாம் இருவரும் இணைந்து சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பாடுபடுவோம் என்றும் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.