லோக்சபா தேர்தல் முன்னிட்டு நாகர் கோவிலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க காங்., தலைவர் ராகுல் தமிழகம் வந்துள்ள நிலையில், இந்திய அளவில் “GoBackRahul” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகிஉள்ளது.

ராகுலின் சென்னை வருகையை ஒட்டி டுவிட்டரில் தமிழக அளவில் #GoBackRahul எனும் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பெற்றது. தமிழக பாஜக தனது அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காலை 6 மணியளவில் #GoBackRahul, #GoBackPappu என்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவுகளை டுவீட்செய்தது. காலை 9.30 மணி நிலவரப்படி #GoBackRahul இந்திய அளவிலான டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

 

ராகுல் இன்று தமிழகம்வந்துள்ள நிலையில் டில்லி, மும்பை, லக்னோ, அமிர்தசரஸ், ஐதராபாத், பெங்களூரு, ஜெய்ப்பூர், போபால், ஸ்ரீநகர், கான்பூர், இந்தூர் ஆகிய இடங்களில் இருந்து இந்தபதிவுகள் இடப்பட்டு அந்த ஊரின் டிரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படுத்தி ஏராளமான படங்கள் பதிவிடப்பட்டு, ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.