முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணா மலையை உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் புகழ்ந்து பேசியுள்ளார்.

இதில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், “சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அதே சிங்கள மக்கள் ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் ராஜபக்சே சகோதரர்கள் ஓடி ஒளிந்து கொள்கிற நிலைமைதான் உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை விவகாரம் சர்வதேச பிரச்சனையாகக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்கிறது. இது இந்தியாவுக்கு பேராபத்தான ஒன்று. இலங்கை பிரச்சனையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி ஆழமாக புரிந்துகொண்டு பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுமகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அதேபோல் செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர்.” என்றார்.

Comments are closed.