பாகிஸ்தானின் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவத்தின் விமானப் படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப் பட்டன.
 
காஷ்மீர், ராஜஸ்தான் மாநில பாகிஸ்தான் எல்லையில் கூடுதல் ராணுவத் தினரை குவித்து, இந்தியா பதிலடி அளிக்காமல் தடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு உத்தரவிடப் பட்டிருந்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தானின் முப்படைகளும் தயார் நிலையில்இருந்தன. பாகிஸ்தானின் ரேடார்கள் கண்காணித்தபடி இருந்தன. இத்தனை முன்னேற்பாடுகளுக்கு நடுவேயும், இந்தியராணுவம் விமானம் மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் பாரசூட்மூலம் குதித்து, தங்களது இலக்கான தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தி விட்டு, வெற்றிகரமாக எந்தபாதிப்பும் இன்றி தாய் நாட்டுக்கு திரும்பிவந்துள்ளது.
 
இந்த தாக்குதலில் விமானப் படையுடன், சிறப்பு அதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இலக்கை சரியாக தாக்கி அழித்து விட்டு, எந்தவித இழப்புமின்றி வீர நடைபோட்டு திரும்பி வந்துள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள். அதாவது, பாகிஸ்தானின் முப்படைகள் கண்களிலும் மண் தூவப் பட்டுள்ளது. பொக்ரானில் யாருக்கும் தெரியாமல் அணுகுண்டை சோதித்துபார்த்து அமெரிக்காவையே ஆட்டம் காணவைத்த, இந்தியாவுக்கு, இந்த தாக்குதல் ஒன்றும் பெரியவிஷயமாக தெரியவில்லை.
 
ஆனால் பாகிஸ்தானோ இப்போது அலற ஆரம்பித்துள்ளது. மியான்மரில் புகுந்து இந்தியராணுவம் தீவிரவாதிகளை அழித்ததைபோல பாகிஸ்தானில் தாக்குதலை நடத்தமுடியாது என்று பலரும் கருத்துகூறிவந்தனர். ஆனால், இந்திய ராணுவத்தின் சிறப்புபயிற்சி பெற்ற வீரர்கள் எந்த இலக்கையும் தாக்கி அழிக்கவல்லவர்கள். இன்று இந்திய ராணுவம் தனது தீரத்தை உலகத்திற்கு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது என்றார்

Leave a Reply