வங்க தேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள்  ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய – வங்கதேச எல்லையை மத்தியஅரசு முழுவதுமாக மூடிவிடும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலம் துலியாஜன் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவுவது தொடர் கதையாகவே உள்ளது,

ஊடுருவலுக்கு காரணம் என்ன? அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ்கட்சி ஊடுருவலை தடுத்து நிறுத்த இதுவரை முயற்சிக்காதது ஏன்? ஊடுருவல் காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய பயன்படுத்தும் இந்திய – வங்கதேச எல்லையை ஏன் முழுவதுமாக அடைக்க வில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், எல்லையை மூடுவது குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்திய- வங்கதேச எல்லையை முழுவதுமாக அடைத்து விட்டால், ஊடுருவல்காரர்களால் இந்தியாவுக்குள் நுழையமுடியாது. இதை மத்திய அரசு விரைவில் செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply