அமெரிக்க அதிபர்தேர்தலில் தன்னை வெற்றி பெறச்செய்த இந்திய வம்சாவளியினருக்கு புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். புளோரிடா மாகாணம், ஆர்லாண்டோவில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, தேர்தலின்போது ஆர்லாண்டோவில் வசிக்கும் இந்தியசமூகத்தினர், இந்துக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தேர்தலின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்துபேசிய ட்ரம்ப், இந்துக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் புளோரிடா, வெர்ஜினியாவில் உள்ள இந்துகோயில்களின் நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

தேர்தலுக்கு முன்பாக குடியரசுகட்சியின் இந்துபிரிவு நடத்திய கூட்டத்திலும் ட்ரம்ப் கலந்துகொண்டார். இந்நிலையில் முதல் முறையாக தனது தேர்தல் வெற்றிக்கு இந்தியர்களுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply