உலக அரங்கில் நேரம்பார்த்து சதம் அடித்து விட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி.

ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது. இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியிலும் இறங்கிவிட்டது.

அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. ஆனால் உடனே பொருளாதார தடை விதிக்க முடியுமா? சிக்கல் ஏராளம், இதில்தான் மோடி வென்றிருக்கின்றார்.

ஆம், எஸ்.400 அமைப்பினை ஏற்கனவே சீனா வாங்கி இருக்கின்றது, இனி அது இந்தியாவிடம் இல்லா பட்சத்தில் இங்கு ராணுவ சமநிலை குறையும், சீனாவின் கை ஓங்கா பட்சத்தில் இந்தியாவும் நிற்க அனுமதிக்கும் தேவை அமெரிக்காவிற்கு உண்டு

 

இன்னொன்று சீனாவுடன் வர்த்தக போர் தொடங்கி இருக்கும் நேரத்தில் இந்தியாவினை பகைத்துகொள்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல‌ இரு பெரும் நாடுகளை ஒரே நேரத்தில் பகைத்தால் அமெரிக்க வியாபாரமும் படுத்துவிடும்.இதனால் பல்லை கடித்து கொண்டு நிற்கின்றது அமெரிக்கா

 

பழைய அமெரிக்கா என்றால் ஹாய் பாகிஸ்தான் ஹவ் ஆர் யூ" என கட்டிபிடிக்க ஓடும், ஆனால் பாகிஸ்தானை கட்டியழ அவர்களுக்கும் விருப்பமில்லை. கூட்டி கழித்து பார்த்தால் அமெரிக்காவின் நிலையினை கணக்கிட்டு அட்டகாசமாக தன் நலன்களை காத்து கொண்டது இந்தியா.

 

சரியான காலத்தில் மிக சரியான கணக்கு என்பதால் மோடிக்கு வாழ்த்துக்கள். பெட்ரோலுக்கு அதிகவரி கொடுக்கின்றோம் என ஒரு பக்கம் நாம் குறைபட்டு கொண்டாலும், அந்த பணம் இம்மாதிரி நாட்டு பாதுகாப்புக்கும் பயன்படுகின்றது என்பதில் ஆறுதல்

 

எஸ் 400 சிஸ்டத்தின் விலை பல ஆயிரம் கோடி, எத்தனை நாடுகளால் வாங்கமுடியும்? நம்மால் முடிந்திருக்கின்றது.. எப்படியோ முன்பு  காங்கிரஸ் அரசால் ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் எஞ்சினை வாங்கமுடியாமல் போனது.

இந்த எஸ 400 என்பதும் அப்படி ஆகிவிடுமோ என தேசம் அஞ்சியது ஆனால் நிர்மலா சீத்தாராமன், அஜித் தோவால், மோடி கூட்டணி மிக தைரியமாக சாதித்திருக்கின்றது.நிர்மலா சீத்தாராமன் ஒரு தமிழர் என்பதால் கூடுதல் வாழ்த்துக்கள், வரலாற்றில் நின்றுவிட்டார் நிர்மலா சீத்தாராமன. சந்தேகமில்லை இது வரலாற்று சாதனை

 

அமெரிக்கா எதிர்ப்பினை மீறி ரஷ்யா சென்று ஒப்பந்தமிட்ட வீரதமிழச்சி அவர்தான். அதன் தொடர்ச்சிதான் புட்டீன் இங்கு வந்திருப்பது.நிச்சயம் உலக அரங்கில் இது இந்தியாவின் மாபெரும் வெற்றி, இந்திய ஊடகமும் பத்திரிகையும் கொண்டாட வேண்டிய வெற்றி.

ஆனால் தமிழக ஊடகம் வழக்கம் போல தூக்கம், சம்பந்தம் இல்லாமல் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பது போல் எழுதிகொண்டிருக்கின்றன‌

 

அவைகள் அப்படித்தான்.வலுவான பாரதம் அமையட்டும், பாரினில் நிமிர்ந்து நிற்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.