ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள இந்திய வீரர், வீராங்க னைகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற் கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை சந்திக்கிறார். 13 விளையாட்டுப் பிரிவுகளில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ள 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைளுடன் கலந்துரையாடும் மோடி, அவர்கள் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்ப டுவதற்கு வாழ்த்துகளையும் தெரிவிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தாலும், அதில் சிலர் வெளி நாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதனால் மோடியுடனான சந்திப்பின் போது எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என தெரியவில்லை.
ரியோ ஒலிம்பிக்போட்டி வரும் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது.
Related Posts:
- நாகலாந்தில் பா.ஜ.க, கூட்டணி ஆட்சி
- பதக்கங்கள்வென்ற இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு…
- சர்வதேச தடகளப் போட்டி நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஹிமா தாஸ்
- ஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து
- பாகிஸ்தானின் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடி
- தேசம் காக்கும் பணியில் உயிர் நீ்த்த இராணுவ வீரர்…