இந்து இயக்க நிர்வாகிகள் கொலையில் குற்றவா ளிகளைக் கண்டறிய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வேலூரில் தொடங்கி திண்டுக்கல், கோவை, திருப்பூர், சென்னை என இந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது. நேற்று (அக். 4) சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் நரஹரி தாக்கப்பட்டுள்ளார். இந்ததாக்குதகள் நடத்தப்பட்ட விதத்திலிருந்து அவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மதவாத அரசியல் பேசுபவர்கள் வாக்குவங்கி அரசியலுக்காக இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லப்படுவதை கண்டிப் பதில்லை. வேலூரில் டாக்டர் அரவிந்த்ரெட்டி கொல்லப்பட்டபோது போலி குற்றவாளிகளை கொண்டுவராமல், உண்மையான குற்றவாளிகளை பிடித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல் துறையினர் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும். ஆனால், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையல் காவல் துறை செயல்படுவது துரதிருஷ்டவசமானது.

 

தற்போது நடக்கும் நிகழ்வுகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்வது சாத்தியமல்ல. எனவே, அமைச் சர்கள் இதனை காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மக்கள் பொறுமை இழந்தால் சட்டம் – ஒழுங்குகெடும் என்பதை அரசு உணரவேண்டும் இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.

Leave a Reply