தேர்தல் கால நடைமுறை அமலுக்குவந்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திரு விழா காலத்தில் எப்பொழுதும் போல வரையப்படும் “மா கோலத்தில் ”
தாமரைப் பூ வடிவத்தில் இருக்கிறது.

இது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் கோவில்களில் ஒருகுறிப்பிட்ட சின்னத்திற்கு ஆதரவு கேட்பதுபோல இருக்கிறது .
என்று சொல்லி மூளையை அடகுவைத்த தேர்தல் அதிகாரி அறநிலையத்துறை அதிகாரியை வலுக்கட்டாயப்படுத்தி மனசாட்சியே இல்லாமல் மாகோலத்தை அழித்திருக்கிறார்.

இதற்கு “இந்து தமிழர் கட்சியின் ”சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்து கொள்கிறோம்.

தேர்தல்கால விதிமுறைகள் மதிக்க தகுந்தவைதான் . ஆனால் இதுபோன்று நடப்பதெல்லாம் அறிவீனத்தின் உச்சம்.

இவ்வளவு கண்டிப்பு பேர்வழியாக இருக்கக் கூடிய தேர்தல் அதிகாரிகள் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடாது என்று மதப்பிரச்சாரம் செய்வதுபோல தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் அங்கு சென்று இந்த மூளையை
அடகு வைத்த அறிவான அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

தேர்தல் விதி அமலில் இருக்கிறது என்பதற்காக, இனிமேல்

1.திருக்கோவில் இருக்கக் கூடிய தெய்வத் திருமேனிகள் “அபய ஹஸ்தம்” காக்கும்கரம் – கை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இது காங்கிரஸ் சின்னம் துணிவைத்து மூடிவிடுங்கள் என்று கோவில் அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிடுவார்களா?

2.தினசரி பக்தர்கள் கோவிலில் நிற்கக் கூடிய சாமிகளுக்கு தாமரைப் பூ மாலை , தாமரைபூ என்று சாற்றும்போது கூடாது “தாமரை ” பாஜக சின்னம். தாமரைப்பூக்கள் கோவில் வழிபாட்டுக்கு இங்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு செய்வார்களோ?

 1. “யானை ” மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை உருவம் கோவில்களில் இருக்கிறது. அவைகளை எல்லாம் துணி வைத்து மூடுவார்கள்.இல்லை கோவிலில் இருக்கக்கூடிய யானைகளுக்கு துணிபோட்டு பக்தர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்ற தடை விதிப்பார்களா?
 2. சூரிய பகவானுக்கு சூரியபிரபை இருக்கும் தேர்தல் முடியும் வரை
  நவகிரகங்களில் சூரியனை வணங்க தேர்தல் ஆணையம் தடைவிதிக்குமா?
 3. மக்கள் நீதி மையத்தின் சின்னமான டார்ச் லைட்.
  இதை இரவு10 மணிக்கு மேல் ஒளிரச் செய்தால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அறிவிக்குமோ?
 4. “மோதிரம் “ஒரு கட்சியின் சின்னம் இனிமேல் கைகளில் மக்கள் மோதிரம் போட்டிருக்கலாம். ஆனால் மோதிரம் வெளியே தெரியாத மாதிரி கைகளில் அனைவரும் கையுறை அணிய வேண்டும் என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பார்களோ ?
 5. ” கிரிக்கெட் மட்டை” ஒரு சின்னம் .
  தேர்தல் வரை யாரும் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது, கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு யாரும் விளையாடக் கூடாது ,என்று தேர்தல் ஆணையம் அறிவிக்குமோ?
 6. “விசில் ” ஒருகட்சியின் சின்னம் பள்ளி கல்லூரிகளில் பயிற்சி எடுக்கும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடும் கல்வி பயிற்சி பணியாளர்கள் விசில் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது தேர்தல் விதி மீறல் என்று சொல்லுவார்களோ?

10 .”செருப்பு” ஒரு கட்சியின் சின்னம் தேர்தல் முடியும்வரை இனிமேல் செருப்பு போடக்கூடாது. என்று சிறப்புச் சட்டம் கூட பிறப்பிப் பார்களோ?

11.”இரட்டை மின்விளக்கு ” இது கூட ஒருசுயேச்சை சின்னம்தான்.
10 மணிக்கு மேல் இரட்டை மின் விளக்கு ஒளிர கூடாது . அப்படி ஒன்று இருந்தால் அது தேர்தல் பிரச்சாரம் ஆகும் என சொல்லி மின்விளக்கு ஒளிர்வதற்கு தடை விதித்து மின்விளக்கை அனைத்து விடுவார்களோ?

 1. அதிகாலை உதிக்கும் உதய சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்று “செல்லூரார்” பாணியில் தெர்மகோல் போட்டு சூரிய உதயத்தை மறைக்க செய்வார்களோ?
 2. “மாம்பழம்” ஒரு கட்சியின் சின்னம் கடைகளில் இனிமேல் விற்கக்கூடிய மாம்பழத்தை 10 மணிக்கு மேல் கடைகளில் இருக்கக்கூடாது. பொது மக்கள் பார்க்காதிருக்க துணி போட்டு மூடுங்கள் என்று விற்பனைக்கு தடை போடுவார்களோ ?
 3. தொப்பி ஒரு கட்சியின் சின்னம் இனிமேல் மழையோ வெயிலோ புயலோ தொப்பி அணிந்து வரக்கூடாது என்று தொப்பி அணிய தடை விதிப்பார்களோ?
 4. “குக்கர் ” ஒரு கட்சியின் சின்னம் தேர்தல் முடிந்த வரை பொதுமக்கள் யாரும் குக்கரில் சமைக்ககூடாது
  மண் பாத்திரத்தில் அல்லது ,
  எவர்சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாய சட்டம் கூட போடுவார்களோ?
 5. “கத்தரிக்கோல் ” ஒரு சின்னம். தேர்தல்கால முடிகின்ற வரை சலூன் கடைகளில் “கத்தரிக்கோல் ” கொண்டு முடி வெட்டக்கூடாது.“டெய்லர் “கடைகளில் துணி வெட்டக் கூடாது . அப்படி அவர்கள் செய்தால் அது தேர்தல் விதி மீறல் என்று வழக்கு பதிவு கூட செய்வார்களோ?
 6. “சீப்பு “ஒரு சின்னம். தேர்தல் முடிந்த வரை தேர்தல் விதிகளுக்கு முரணாக யாரும் சீப்பை எடுத்து பிறர் பார்க்க தலை சீவ கூடாது.
  இப்படி சீப்பை எடுத்து சீவினால் அது தேர்தல் விதிமீறல் எனவே
  பரட்டை தலையாக திரியுங்கள் ,
  இல்லை என்றால் மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என்று அவசர சட்டம் பிறப்பித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை?
 7. “சிலிண்டர் ” ஒருசின்னம் இனிமேல் வீடுகளில் சிலிண்டருக்கு சாக்கு போட்டு மூடிவைத்துக் கொள்ளுங்கள் ஓட்டல்கள் சமைக்கக்கூடிய சிலிண்டரை பாதாளக் குழியில் பதுக்கி வையுங்கள். பொதுமக்கள் பார்த்து விட்டு ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று சொல்லி உத்தரவு போட்டாலும் ஆச்சரியப் படக் கூடாது.
 8. “மின்விசிறி “ஒரு சின்னம் இனிமேல் தேர்தல் விதிகளுக்கு முரணாக மின்விசிறி 10 மணிக்கு மேல் சுத்த கூடாது.

பொதுமக்களே காற்று இல்லாமல் செத்து தொலையுங்கள்.
இல்லையென்றால் காடுகளில் கட்டில் போட்டு தூங்கிக் கொள்ளுங்கள் . … என்று உத்தரவு போட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

 1. “தென்னை மரம்” ஒருசின்னம் தேர்தல் காலம் முடியும் வரை இளநீர் விற்பனைக்கு தடை விதித்து தென்னை மரங்களுக்கு எல்லாம் ஓலையை வைத்து மூட செய்ய உத்தரவு பிறப்பித்தாலும் பிறப்பிப்பார்கள்.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்கமுடியும்.

தேர்தல் பணியாற்றும் தேர்தல் அதிகாரி பெருமக்களே.

இந்துக் கோயில்களில் மட்டும் நீங்கள் வீரம் காட்டாதீர்கள் .

மசூதி சர்ச்களுக்கு சென்று உங்கள் வீரத்தை கொஞ்சம் காட்டுங்களேன்.

~ என்று இந்து தமிழர் கட்சியின் இராம. இரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply