இந்து அமைப் புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கும், கொலை செய்யப் படுவதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக இந்த அமைப்பின் வட, தென்தமிழக தலைவர்கள் எம்.எல்.ராஜா, ஆர்.வி.எஸ்.மாரிமுத்து ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கை:


தமிழகத்தில் இந்துஅமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், படு கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம் மட்டும் பலதாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கோவையில் இந்து முன்னணி மாநகரச் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் இந்து முன்னணி நகரச்செயலர் சங்கர் கணேஷ், திருவல்லிக் கேணி நகர ஆர்எஸ்எஸ் செயலர் நரஹரி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதேபோல், கடந்த 2014 -ஆம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜ் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், வேலூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகியபகுதிகளில் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி சேதப்படுத்தப் பட்டன. ஆனால், இதுவரை எந்த சம்பவத்திலும் குற்றவாளிகளை போலீஸார் கண்டு பிடித்து, பின்னணியில் உள்ளோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.
காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் கண்டறிந்து கடும் தண்டனை வழங்கவேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் படாததை ஆர்.எஸ்எஸ் வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply