அமெரிக்காவைச் சேர்ந்த பீ ரிசர்ச் அமைப்பு வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2015 புள்ளி விவரத்தின்படி உலக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 230 கோடியாகவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 180 கோடியாகவும் உள்ளது. வரும் 2055 முதல் 2060 வரை முஸ்லிம்குழந்தைகள் பிறப்பு 23.2 கோடியாகவும் கிறிஸ்தவ குழந்தைகள் பிறப்பு 22.6 கோடியாகவும் இருக்கும்.

2060-ம் ஆண்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 300 கோடியாகவும் கிறிஸ்த வர்களின் எண்ணிக்கை 310 கோடியாக இருக்கும். வரும் 2075-ம் ஆண்டில் உலகளாவிய மக்கள்தொகையில் முஸ்லிம்கள் முதலிடத்தை எட்டுவார்கள்.

இந்து குழந்தைகளின் பிறப்புவிகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. வரும் 2055 முதல் 2060 வரை யிலான காலத்தில் இந்து குழந்தைகள் பிறப்பு 3.3 கோடியாகமட்டுமே இருக்கும்.

2015 புள்ளிவிவரத்தின்படி இந்துக்களின் எண்ணிக்கை 109.91 கோடியாக உள்ளது. 2060-ல் இந்துக் களின் எண்ணிக்கை 139.29 கோடியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply