இந்து முன்னணி சார்பில் ‘தமிழகத்தை குறி வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற தலைப்பில் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுவிழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

ஆவணப் படத்தின் குறுந்தகடை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் வெளியிட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சாமி பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து ராம.கோபாலன் பேசும்போது, தமிழகத்தில் இந்துக்களுக்கு இழைக்கபடும் அநீதி குறித்த இந்த ஆவணப் படத்தை ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துச் செல்லவேண்டும். தமிழகம் முழுவதும் இது பரவவேண்டும் என்பதுதான் நோக்கம் என்றார்.

விழாவில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்துக்களின் நலம்காக்கும் ‘ரூட்ஸ் இன் காஷ்மீர்’ என்ற அமைப்பை நடத்திவரும் சுஷில் பண்டிட், இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *